Tuesday, 22 August 2017

புவியின் வளிமண்டலம்

ü   புவியின் வளிமண்டலமானது வாயுக்களால் சூழப்பட்டுள்ளது. இவைகள் புவி ஈர்ப்பு விசையினால் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.புவியின் வளிமண்டலமானது வாயுக்களின் கலவையினால் ஆனது.
ü   வளிமண்டலத்தில் காணப்படும் முக்கிய வாயுக்களானது, நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனாகும். ஆர்கான், நியான், ஹீலியம், கிரப்டான், கார்பன்டை ஆக்ஸைடு மற்றும் ஓசோன் ஆகியவை குறைந்த அளவு காணப்படும் வாயுக்களாகும். இவைகளைத் தவிர நீராவி மற்றும் தூசுக்களும் வளிமண்டலத்தில் காணப்படுகின்றன. இவையே வானிலை மாற்றத்திற்கு காரணமாக அமைகின்றன.
ü   வளிமண்டலத்தின் உயரத்திற்கு ஏற்ப வாயுகட்களின் அளவானது வேறுபாடுகின்றது. அவை பூமியின் மேற்பரப்பிற்கு அருகில் அடர்த்தி அதிகமாகவும் உயரம் அதிகரிக்க அதிகரிக்க குறைந்தும் காணப்படுகின்றது.
ü   வளிமண்டலம் அதன் பண்புகளின் அடிப்படையில் நான்கு அடுக்குகளாக பிரிக்கப்படுகிறது. அவை : அடியடுக்கு (Troposhere), படையடுக்கு (Stratosphere), அயனியடுக்கு (Lonosphere) மற்றும் வெளியடுக்கு (Exosphere).

அடியடுக்கு
ü   அடியடுக்கு புவியின் மேற்பரப்பிலிருந்து துருவப் பகுதிகளில் 8 கி.மீ வரையிலும் பூமத்தியரேகைப்பகுதியில் 18 கி.மீ. வரையிலும் பரவிக் காணப்படுகிறது. வானிலை மூலங்களான வெப்பநிலை,காற்று, காற்றின் அழுத்தம், மேகங்களின் உருவாக்கம் மற்றும் மழைப்பொழிவு ஆகிய அனைத்து மாற்றங்களும் இந்த அடுக்கிலேயே நடைபெறுகின்றது. உயரம் அதிகரிப்பிற்கு ஏற்ப வெப்பநிலை குறைவது இந்த அடுக்கில் மட்டுமேயாகும். சேணிடை அடுக்கு (Tropopause) என்ற மெல்லிய அடுக்கானது அடியடுக்கு மற்றும் படையடுக்கு இவைகளுக்கிடையே அமைந்துள்ளது.
ü   வானிலையியல் என்பது வளிமண்டலத்தைப் பற்றி படிக்கும் அறிவியலாகும். மேலும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிகழும் வானிலை மாற்றங்களை உற்று நோக்குவதாகும்.

படையடுக்கு
ü   படையடுக்கானது புவியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 80 கி.மீ வரை பரவி காணப்படுகிறது. ஜெட் விமானங்கள் இந்த அடுக்கில்தான் பயணிக்கின்றன. படையடுக்கின் உச்சி விளிம்பில் ஓசோன் வாயு அதிக அளவில் காணப்படுகின்றது. இவை, சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக் கதிர்களை வடிகட்டி கெடுதல்களிலிருந்து பாதுகாக்கின்றது. சூரியனிடமிருந்து வரும் வடிகட்டப்படாத கதிர்களானது உயிரினகளின் திசுக்களை அழிக்கும் ஆற்றல் கொண்டவை. புவியின் மீது வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் ஓசோன் வாயு மிக முக்கியமானதாகும். இந்த அடுக்கானது சமவெப்ப அடுக்கு (Isothermal Layer) மற்றும் ஓசோன் அடுக்கு எனவும் அழைக்கப்படுகிறது. படையடுக்கினை தொடர்ந்து மீண்டும் ஒரு மெல்லிய அடுக்கு காணப்படுகின்றது. இது மீவளி இடையடுக்கு (Stratopause) என அழைக்கப்படுகிறது.

அயனியடுக்கு
ü   அயனியடுக்கு புவியின் மேற்பரப்பிலிருந்து 80 கி.மீ முதல் 500 கி.மீ வரை பரவிக் காணப்படுகிறது.இது அயனியடுக்கு என அழைக்கப்படக்காரணம் வளிமண்டலத்தின் இப்பகுதியில் சூரிய கதிர்கள் மின் செறிவூட்டப்படுவதாலாகும். இவை வானொலி அலைகளை பூமிக்கு திருப்பி அனுப்புவதால் நவீன தொலைதொடர்பிற்கு மிகவும் உதவுகின்றது. ஒருதிறப்பொன்னென்றழைக்கப்படும் (Auroras) வண்ண மயமான காட்சியமைப்பினை வட கோளத்தில் வடமுனை வளரொளி (Northern lights) அல்லது வடதுருவ விண்ணொளி (Aurora Borealis) மற்றும் தென் கோளத்தில் தென்முனை வளரொளி (Southern light) ஆகியவையும் இங்கே காணப்படுகின்றன.
ü   கதிர்சீசலியல் (Aerology) என்பது வானிலையியலின் (Meteorology) ஒருபிரிவு ஆகும். வளிமண்டலத்தினை பலூன்கள் வானூர்ததிகள் மற்றும் செயற்கைக்கோள்களை பயன்படுத்தி ஆராய்வதாகும். கதிர்வீசலியலானது ஓசோன் அடுக்கு, சூரிய கதிர் வீச்சு, நீண்ட அலைவரிசையினை கொண்ட கதிர்வீச்சு ஆகியவற்றினையும் ஆராய்கின்றது.சுருக்கமாக கூறுவதென்றால் வளிமண்லத்தின் மேல் அடுக்கினைப் பற்றி படிப்பதாகும்.

வெளியடுக்கு

ü   வெளியடுக்கு என்பது வளிமண்டலத்தின் மிக உயரமான அடுக்காகும். எக்ஸோஸ்பியர் அடுக்கானது பெருமளவு ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களை கொண்டுள்ளது. சில சமயங்களில் இவை அண்ட வெளியின் புறப்பகுதியாகவே கருதப்படுகின்றது.

No comments:

Post a Comment