Saturday, 12 August 2017

நீதி இலக்கியம்

1) சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூல்களுக்குப் பெயர்
     அ) பதினெண் கீழ்க்கணக்கு   ஆ) பதினெண் மேற்கணக்கு
     இ) ஐம்பெருங்காப்பியங்கள்    ஈ) பதினெண் புராணங்கள்
2) கி.பி. 470 இல் வச்சிராந்தி என்ற சமண முனிவர் நிறுவிய திராவிட தமிழ்ச்சங்கத்தில் தோன்றிய நூல்களுக்குப் பெயர்
     அ) சைவ இலக்கியங்கள்      ஆ) வைணவ இலக்கியங்கள்
     இ) நீதி நூல்கள்              ஈ) பதினெண் மேற்கணக்கு
3) நீதி நூல்கள் யாருடைய காலத்தில் எழுந்தன?
     அ) பாண்டியர்  ஆ) சோழர்  இ) சேரர்  ஈ) களப்பிரர் 
4) நீதி நூல்களின் யாப்பு வடிவம்
     அ) ஆசிரியப்பா          ஆ) வெண்பா 
     இ) வஞ்சிப்பா             ஈ) கலிப்பா        
5) ‘சங்கம் மருவிய கால இலக்கியங்கள் இப்படியும் அழைக்கப் படுகின்றன?
     அ) மறுமலர்ச்சி கால இலக்கியங்கள்  
    ஆ) இருண்ட கால இலக்கியங்கள்           
     இ) இடைக்கால இலக்கியங்கள்     
     ஈ) சிற்றிலக்கியங்கள்
6) ‘பிற்சான்றோர் எனப்படுபவர்கள்
     அ) சங்க இலக்கியம் பாடியோர்    
     ஆ) மறுமலர்ச்சி இலக்கியம் பாடியோர் 
     இ) கீழ்க்கணக்குப் பாடியோர்    
     ஈ) பக்தி இலக்கியம் பாடியோர்
7) அவனே புலவன் அவனே அறிஞன்: அவனே தமிழை அறிந்தோன் என்று      பழம் பாடல் யாரைப் பாராட்டுகின்றது?
     அ) திருவள்ளுவர்        ஆ) தொல்காப்பியர்
    இ) கபிலர்                ஈ) பாரதியார்      
8) களப்பிரர் காலம் இப்படியும் அழைக்கப்படுகிறது?
     அ) மறுமலர்ச்சிக் காலம்    ஆ) இடைக்காலம்     
     இ) முற்காலம்             ஈ) இருண்டகாலம்
9) களப்பிரரின் மொழி என்று கூறுப்படுவது
     அ) பாலி  ஆ) தெலுங்கு  இ) மைதிலி  ஈ) பிராகிருதம்
10)   மூத்தோர்கள் பாடியருள் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் கேடில் பதினெட்டுக்கீழ்க்கணக்காகும் என்று கூறும் நூல்
     அ) தமிழ்விடுதூது        ஆ) மனோன்மணியம் 
      இ) நன்னூல்             ஈ) சிலப்பதிகாரம்

No comments:

Post a Comment