Thursday, 17 August 2017

இந்தியா


ü   உணவு பொருள் உற்பத்தியில் தன்னிறைவையும் தொழில் துறையில் உலக அளவில் பத்தாவது இடத்தையும் பெற்றுள்ளது.
ü   உலக நாடுகளின் வரிசையில், விண்வெளி ஆய்வில் இந்தியா ஆறாவது இடத்தை பெற்றுள்ளது.
ü   உலகின் 7 ஆவது பெரிய நாடாகவும், மக்கள் தொகை அடிப்படையில் சீனாவிற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தையும் இந்தியா  பெற்றுள்ளது.
ü   இந்தியா, வடக்கே இமயமலைத்தொடர், தெற்கே இந்தியப்பெருங்கடல், கிழக்கே வங்காளவிரிகுடா, மேற்கே அரபிக்கடல் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.
ü   இந்தியா உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடாகும். இது இறையாண்மையுடைய, சமதர்ம, மதசார்பற்ற, மக்களாட்சிக் குடியரசு நாடு. இது பாராளுமன்ற அமைப்பின்படி செயல்படுகிறது.
ü   1950 ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியல் அமைப்பின்படி இந்தியக் குடியரசானது நிர்வகிக்கப்படுகிறது.
ü   இந்திய அரசியல் அமைப்பு உலகின் மிக நீண்ட, எழுதப்பட்ட அரசியல் ஆவணமாகும்.
ü   இந்தியக் குடியரசு 29 மாநிலங்களையும், 7 யூனியன் பிரதேங்களையும் உடையது.
ü   உலகத்தின் உள்ள சுதந்திரமான நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டிற்கென்று சிறப்பான அடையாளங்களைக் கொண்டுள்ளன. அவற்றை தேசியச் சின்னங்கள் என்று அழைக்கிறோம்.
ü   தேசியச்சின்னங்கள் நமது நாட்டின் ஒருமைப்பாட்டு அடையாளங்களாக உள்ளன.

தேசியக்கொடி
ü   செவ்வக வடிவமைப்பைக் கொண்ட நமது தேசியக்கொடியின் மேற்பகுதியில் காவி நிறத்தையும், நடுவில் வெண்மை நிறத்தையும், கீழே கரும்பச்சை நிறத்தையும் கொண்டுள்ளது.
ü   அதன் நீள, அகல விகிதம் 3:2 ஆகும். கொடியில் மேல் உள்ள காவி நிறமானது தியாகத்தையும், தைரியத்தையும் குறிக்கிறது. மேலும் அது சதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுபடுத்துகிறது. நடுவில் உள்ள வெண்மைநிறம் உண்மையைக் குறிக்கிறது.
ü   வெண்மைப் பகுதியில்  கருநீலநிறத்தில் அமைந்துள்ள சக்கரம் அறவழியில் முன்னேறிச் சென்று அமைதியினையும், செழுமையினையும் பெற்றுத்தர தூண்டுகிறது. இந்த சக்கரத்தின் வடிவம் சாரநாத் அசோகத்தூணின் தலைப்பகுதிக்குக் கீழ் உள்ள வடிவமாகும்.
ü   சக்கரத்தின் விட்டமும், வெள்ளைப் பட்டையின் அகலமும் , சரிசம வீதத்தில் உள்ளது. வெண்மை நிறப்பட்டையில் அமைந்துள்ள சக்கரம் 24 ஆரங்களை உடையதாகும்.
ü   கீழே உள்ள கரும்பச்சை நிறம் இந்தியாவின் செழிப்பையும், வளமான நிலத்தையும், பசுமையினையும்,நம்பிக்கையினையும் குறிக்கின்றது.நமது கொடியை நாம் மதித்தல் வேண்டும்.
ü   அரசியல் நிர்ணயச்சபை, தேசியக்கொடியை ஜீலை 22ஆம் நாள்  1947ஆம் ஆண்டு, சுதந்திரம் பெறுவதற்கு மூன்றுவார காலத்திற்கு முன்பே, அங்கீகாரம் அளித்தது. முதல் முறையாக நமது  தேசியக்கொடி ஆகஸ்ட் 15 ஆம் நாள் 1947 ஆம் ஆண்டு ஏற்றப்பட்டது.
ü   ஆந்திர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பிங்காரி வெங்கையா தேசிய கொடியை வடிவமைத்தவர் ஆவார்.

தேசியக் கீதம்
ü   இந்திய தேசியக் கீதத்தை (‘ஜனகன மன’) தேசியக்கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் இயற்றினார். வங்களா மொழியில் உள்ள இந்தப்பாடல் ஐந்து பத்திகளைக் கொண்டது. அவற்றில் முதல் பத்தியில் உள்ள பாடல் மட்டுமே தேசிய கீதமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ü   1950 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் நாள் நமது அரசியல் நிர்ணய சபையால் நமது தேசிய கீதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ü   1911 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் நாள் கல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் இப்பாடல் முதன் முறையாகப் பாடப்பட்டது.
ü   தேசிய கீதத்தைப் பாடும், இசைக்கும் கால நேரம் 52 விநாடிகள் ஆகும்.
ü   தேசிய கீதம், தாய்நாட்டின் பெருமை, புகழ் ஆகியவற்றை பிரதிபலிப்பதாக உள்ளது. அது தேசிய ஒற்றுமை, ஒருமைப்பாடு, சகிப்புத்தன்மை, நாட்டுப்பற்று ஆகிய அறச் செய்திகளை உணர்த்துகிறது.

தேசியச் சின்னம்
ü   நமது நாட்டு இலச்சினை அசோகரின் சாரநாத்தூணில் உள்ள சிங்கங்களின் உருவமாகும்.
ü   1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் குடியரசுத்தினத்தன்று, இந்த இலச்சினை நமது இந்திய நாட்டின் இலச்சினையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ü   நமது தேசியச்சின்னத்தில் நான்கு சிங்கங்கள் முதுகோடு முதுகு இணைந்த நிலையில், வட்டபீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ளது.
ü   இச்சிங்கங்களின் உருவங்களானது அதிகாரத்தையும், கம்பீரத்தையும் கட்டிக்காட்டுகிறது. சிங்கங்களின் கீழே உள்ள அடித்தட்டுப் பீடத்தின் வரிசையில் குதிரையும், மத்தியில் சக்கரமும், வலப்புறம் காளையும் உள்ளன.
ü   குதிரை, ஆற்றலையும், வேகத்தையும் குறிக்கிறது. காளை கடினஉழைப்பும், உறுதியையும் குறிக்கிறது. சக்கரம் தர்மத்தையும், அறவழியையும் குறிக்கிறது.
ü   இதன் கீழே தேவநாகரி மொழியில், ‘சத்யமேவஜெயதே’ என்றம் வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் ‘வாய்மையே வெல்லும்’ என்பதாகும்.

தேசிய விலங்கு
ü   இந்தியாவின் தேசிய விலங்காக முதலில் சிங்கம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. தற்போது தேசிய விலங்காக புலி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
ü   வலிமை, திறமை, மிகுந்த ஆற்றல் ஆகிய பண்புகளை குறிக்கும் நோக்குடனட் புலி தேசிய விலங்காக தேர்வு செய்யப்பட்டது.

தேசியப்பாடல்
ü   நமது தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ கவிஞர் பக்கிம்சந்திர சட்டர்ஜியால் சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்டது.
ü   இது, இக்கவிஞர் எழுதிய ‘ஆனந்தமடம்’ என்ற பத்தகத்தில் 1882 இல் வெளியிடப்பட்டது.
ü   1896 இல் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியத் தேசிய காங்கிரஸ் மாநாட்டில் இப்பாடல் முதல் முறையாகப் பாடப்பட்டது.
ü   இப்பாடலை முதல் முதலில் கல்கத்தாவில் பாடியவர் இரவீந்திரநாத் தாகூர். இந்த பாடல் வங்காளத்தில் துர்க்கையை வணங்குவதற்காக பாடப்பட்ட பாடல் என்பதாலும். முஸ்லீம் சுல்தான்களுக்கு எதிரான பாடல் எனவும் இந்திய முஸ்லீம்கள் இந்த பாடலை பாடுவதில்லை.

ü    
ü   தேசியப்பறவை          : மயில்
ü   தேசிய மலர்            : தாமரை
ü   தேசியப் பழம்            : மா
ü   தேசிய விளையாட்டு       : ஹாக்கி
ü   தேசிய ஆறு              : கங்கை
ü   தேசிய நாள்காட்டி         : சாகா காலப்பிரிவு
ü   தேசிய நீர் விலங்கு        : டால்பின்
ü   தேசிய பாராம்பரிய விலங்கு : யானை
ü   தேசிய மரம்              : ஆலமரம்


No comments:

Post a Comment