1. கூற்றுகளை கவனி
1) திரிகடுகத்தின் ஆசிரியர் - நல்லாதனார்
2) திரிகடுகத்தில் 401 வெண்பாக்களை உடையது
3) திரிகடுகத்தின் ஒவ்வொரு பாடலிலும்
13 அறக்கருத்துக்கள் உள்ளன.
4) பதினென்கீழ்க்கணக்கு திரிகடுகம் நூல்களுள் ஒன்று
5) செரு அடுதோள் நல்லாதன் எனக்குறிப்பிடுவது பாயிரம்
6) நல்லாதனார் ஊர் திருத்து
a) 1,2,4,5 மட்டும் சரி
b) 2,3,4,5 மட்டும் சரி
c) 1,4,5,6 மட்டும் சரி
d) 3,4,5,6 மட்டும் சரி
2. தங்கத்தைப் போன்ற ஒளி வீசுகின்ற பேச்சு யாருடையது?
a) முன்சிராம்
b) காந்தியடிகள்
c) மதன்மோகன் மாளவியா
d) விவேகானந்தர்
3. இரவீந்திரநாத் தாகூரின் ஈர்ப்பான இலக்கிய நடையின் உயர்வுக்கு காரணம் என்ன?
a) ஆங்கில அறிவு
b) வடமொழி அறிவு
c) படிப்பறிவு
d) தாய்மொழி அறிவு
4. சரியான பிரித்தறிதலைக் கண்டறிக
திருவாரூர் நான்மணிமாலை
a) திருவாரூர் + நான்மணிமாலை
b) திரு + வாரூர்
+ நான்மணிமாலை
c) திருவாரூர் + நான்கு + மணிமாலை
d) திருவாரூர் + நான்மணி + மாலை
5. மண் சுமந்தார் எனக் குறிப்பிடப்படுபவர் யார்
a) திருமால்
b) சிவபெருமான்
c) நான்முகன்
d) இந்திரன்
6. கூற்றுகளை ஆய்க
1) திருவாரூரில் எழுந்தருளியுள்ள முருகன் மீது பாடப்பெற்ற நூல் நான்மணிமாலை
2) குமரகுருபரர் 18-ஆம் நூற்றாண்டு
3) நான்மணிமாலை பதிணென்கீழ்கணக்கு நூல்
4) நால்வகை பாடல்களால் ஆன நான்மணிமாலை 40 செய்யுளைக் கொண்டது
5) குமரகுருபரர் பிறந்த ஊர் திருவைகுண்டம்
a) 1,2 மட்டும் சரி
b) 4,5 மட்டும் சரி
c) 3,5 மட்டும் சரி
d) அனைத்தும்
7. நாளும் நன்றாக படித்து நீ முன்னேற வேண்டும் எனப் பாடியவர்?
a) கண்ணதாசன்
b) முடியரசன்
c) பாரதிதாசன்
d) வாணிதாசன்
8. தூங்கா நகர் எது?
a) காஞ்சிபுரம்
b) தஞ்சாவூர்
c) மதுரை
d) கோவை
9. கூற்றுகளை கவனிக்க
1) ஆலவாய் என்பது பருந்து
2) பதியெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர் - நல்லூர் நத்தத்தனார்
3) நான்மாடக்கூடல் மதுரை
4) சங்கப்புலவர்களுள் ஒருவரான இவர் மதுரையில் வாழ்ந்தார் - சேந்தம் பூதனார்
5) திருவிழாக்களின் நகர் தஞ்சாவூர்
a) 1,2,3 மட்டும் சரி
b) 3,4,5 மட்டும் சரி
c) 1,2,5 மட்டும் சரி
d) அனைத்தும் சரி
10. பின்வரும் கண்ணதாசன் தொடர்பான கூற்றுகளை கவனிக்க
1) தமிழக அரசின் அரசவைக் கவிஞர் கண்ணதாசன்
2) கண்ணதாசனின் இயற்பெயர் இராமையா
3) கண்ணதாசனின் புனைப்பெயர் கமுகப்பிரியா
4) 1927-ஆம் ஆண்டு சிறுகூடல் பட்டியில் பிறந்தவர்
5) ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை எழுதியர் - கண்ணதாசன்
a) 2,3 மட்டும் தவறு
b) 3,4 மட்டும் தவறு
c) 4,5 மட்டும் தவறு
d) 2,5 மட்டும் தவறு
11. ஹிட்லருக்கு எதிராக திறமையாக வாதாடி எழுத்து மூலம் ஹிட்லரை மன்னிப்பு கேட்கச் செய்தவர்?
a) பலராமன்
b) செண்பகராமன்
c) காந்தியடிகள்
d) நேரு
12. அம்மானைப் பாடியவர் யார்?
a) மயிலேறும் பெருமாள்
b) ஈசான தேசிகர்
c) சுவாமிப் பிள்ளை
d) பெருமாள் பிள்ளை
13. மாயோன் கொப்பூர் மலர்ந்த தாமரைப் பூவோடு என்னும் பாடல் வரிகள் இடம்பெறும் நூல் எது?
a) பரிபாடல்
b) புறநானூறு
c) பதிற்றுப்பத்து
d) நற்றிணை
14. மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை நிறுவியர்
a) நெடுஞ்சேரலாதன்
b) நெடுஞ்செழியன்
c) பாண்டித்துரையார்
d) கடுங்கோ
15 அறிவு நுட்பம் என்ற கிராமியக் கதைகள் நூலின் ஆசிரியர் யார்?
a) ஓசியர் ராம்கி
b) எம்.பி.முத்து
c) கிருபானந்தவாரியார்
d) இலட்சுமி
16. திரு.வி.க கூறும் சிறந்த பூ எது?
a) மல்லிகைப்பூ
b) பருத்திப்பூ
c) ரோஜாப்பூ
d) செம்பருத்தி
17. மயிலுக்குப் போர்வை போர்த்திய வள்ளல் யார்?
a) பேகன்
b) பாரி
c) ஓரி
d) ஆய் அண்டிரன்
18. கூற்றுகளை ஆய்க
1) திரைக்கவி திலகம் மருதகாசி
2) சேமமுற நாள் முழுவதும் உழைப்பதானாலே இந்தத் தேசமெல்லாம் செழித்திடுது நம்மைகையாலே மருதகாசி
3) திருச்சி மேலக்குடியில் பிறந்தவர் மருதகாசி
4) அய்யம்பெருமாள் மிளகாயி அம்மாளின் மகன் மருதகாசி
5) மருதகாசியின் இயற்பெயர் இராசகோபாலன்
a) 1,2,3,4 மட்டும் சரி
b) 2,3,4,5 மட்டும் சரி
c) 1,3,4,5 மட்டும் சரி
d) அனைத்தும் சரி
19. வந்தான் என்னும் சொல்லின் பெயரெச்சத்தைக் காண்க.
a) வந்து
b) வந்தா
c) வந்தவன்
d) வந்த
20. சரியானதைத் தேர்க
1) சிங்கம் பிளிறும்
2) கூகை ஊளையிடும்
3) குதிரை கனைக்கும்
4) மயில் அகவும்
5) கிளி கொஞ்சும்
a) 1,2,3 மட்டும் சரி
b) 3,4,5 மட்டும் சரி
c) 1,3, 5 மட்டும் சரி
d) 2,4,5 மட்டும் சரி
No comments:
Post a Comment